தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2026 முடிவுகள் வரும் மே 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை பார்க்கலாம்.
தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் கலந்து கொண்டனர். மொத்தத்தில் சுமார் 9 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர்.
தேர்வு முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன. சமீபத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றும் பணிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வந்தன.

தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் 2026, மே 20 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடப்படும்.
தமிழ்நாடு 10ஆம் வகுப்பு முடிவு 2026 தேதி மற்றும் நேரம்
| தேர்வு பெயர் | தமிழ்நாடு SSLC பொதுத்தேர்வு 2026 |
| தேர்வு நடத்திய அமைப்பு | அரசு தேர்வுத்துறை (DGE Tamil Nadu) |
| தேர்வு தேதி | மார்ச் 11 முதல் ஏப்ரல் 6, 2026 வரை |
| முடிவு தேதி | மே 20, 2026 |
| முடிவு நேரம் | காலை 9.30 மணி |
| முடிவு முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | www.tnresults.nic.in |
| மற்ற இணையதளங்கள் | www.dge.tn.gov.in, results.digilocker.gov.in |
SSLC Result 2026 எப்படி பார்க்கலாம்?
மாணவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தங்களது முடிவுகளை ஆன்லைனில் பார்க்கலாம்:
- www.tnresults.nic.in இணையதளத்திற்கு செல்லவும்.
- “SSLC Examination Result 2026” என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- பதிவு எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
- Submit பொத்தானை அழுத்தவும்.
- உங்கள் மதிப்பெண் பட்டியல் திரையில் தோன்றும்.
- அதை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
டிஜிலாக்கர் மூலம் முடிவுகளை பார்க்கும் முறை
மாணவர்கள் results.digilocker.gov.in இணையதளம் அல்லது DigiLocker App மூலம் கூட தங்களது டிஜிட்டல் மார்க்ஷீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்:
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்.
- 1 முதல் 3ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்கள் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுகின்றன.
- புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஜூன் 1 முதல் 3ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்படும்.
- 4 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
- 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து முதல்வர் விஜயுடன் ஆலோசித்து மாற்றம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்கள் கவனிக்க வேண்டியது
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். முடிவுகள் வெளியான உடன் அதிகளவில் பயனர்கள் இணையதளத்தில் நுழைவதால் சர்வர் மெதுவாக இயங்க வாய்ப்பு உள்ளது. எனவே பொறுமையாக மீண்டும் முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.